Wednesday 9 March 2011

இளமையாக இருக்க


* எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருப்பதற்கு ஆசனங்கள் உதவுக்கின்றன.


    *    அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.


    *  இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி, மச்சாசனம், சிரசாசனம் ஆகியவற்றை முறையாக செய்து வந்தால் எந்த ஆரோக்கியக் குறைபாடும் இன்றி இளமையாக வாழலாம்.


    * ஆனால்,ஆசனங்களை  முறையாக செய்வது மட்டுமின்றி, இதற்கு இணையான அதாவது நின்றபடி செய்யும் ஆசனங்களையும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.


    * மேலும் இந்த ஆசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நடுவே சாவாசனம், சுவாசனம், நித்திரை ஆசனம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.


    * சவாசனம் என்பதற்கு தெற்கு நோக்கி தலை வைத்தபடி செய்ய வேண்டும் , நித்திரையாசனத்தில் மேற்கு நோக்கி தலை வைத்தபடி செய்ய வேண்டும்.


    *  தினமும் உடற்ப் பயிற்சி செய்வதும் அளவான உணவு உட்கொள்வதும் இளமையாக இருக்க உதவுகிறது.


    *  முதுமையை துரத்தி உடலை இளமையுடன் இருக்க வைக்கும்  குணம் நெல்லிக்கனிக்கு உண்டு.  தினமும் நெல்லிக்கனியை சாப்பிட்டு இளமையுடன் இருங்கள்.


    * நெல்லிக்கனி உடலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.


    *  இஞ்சி, சுக்கு, கடுக்காய்  மூன்றையும் பக்குவம் செய்து தினமும் மூன்று வேலை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமை உணர்வுடன் இருக்கலாம்.


    * வெங்காயம் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும்  மிகவும் உதவியாக இருக்கிறது. அதனால் உடல் அழகு பெற்று இளமையாக இருக்க உதவுகிறது.


    * தினமும் இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.


    * தேன் கலந்த பானம்  காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.


    * மேலும் உடல் அழகை, பெருக்கி   இளமையாக இருக்க உதவும் குணம் தேனிற்கு உண்டு. தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது.


    *  ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் அரிய பொருளாகும்.ஏலக்காய் ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியத்தை உண்டாக்க வல்லது. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!




No comments:

Post a Comment